பொதுவாக அதிர்ஷ்டம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் கதவை தட்டுவதில்லை. ஆனால் ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் அசாதாரணமாக கிடைத்து விடுகின்றது. அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. அதாவது அமெரிக்காவின் விர்ஜீனியாவை சேர்ந்த டியாரா பார்லி என்ற பெண் ஒருவர் லாட்டரி டிக்கெட்டை வாங்கி கடையிலேயே மறந்து தவற விட்டு சென்றுள்ளார்.

அதன் பிறகு லாட்டரி கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு 50000 டாலர்கள் பரிசு விழுந்துள்ளது. இதனால் அவர் இன்ப அதிர்ச்சியில் உள்ளார். இந்திய ரூபாய் மதிப்பு படி அவர் வெற்றி பெற்ற பணத்தின் மதிப்பு 41.5 லட்சம் ரூபாயாகும்.