அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் வீரப்பன் பாளையத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அவர் பேசியதாவது அதிமுக அரசின் திட்டங்களை போல் இல்லாமல் தற்போது கடன் வாங்கி மகளிர் உரிமைத்தொகை பேருந்துகளில் இலவச பயணம் போன்ற அறிவிப்புகளை மட்டும் செய்து வருகிறார்கள். திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின் 20 ஆண்டுகாலம் உழைத்தார் என்பதை மறுக்க முடியாது.
ஆனால் கட்சிக்காக எந்த உழைப்பும் இல்லாமல் உதயநிதி துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையப்போகிறது. திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதையே இல்லை. அதிமுக குறித்த விஜய் பேசாதது குறித்து மற்றவர்கள் ஆதங்கப்படத் தேவையில்லை. மக்களுக்காக பணியாற்றிய அதிமுகவை விஜயால் எப்படி விமர்சிக்க முடியும் என பேசியுள்ளார்.