நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆதிபுருஷ் இந்த. படமானது ராமாயணத்தை மையமாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். ராமாயனத்தை தழுவி எடுக்கப்பட்ட ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில் முதல் நாளிலேயே இப்படம் 60 கோடி வசூல் சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 2 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் முதல் 3 நாட்களிலேயே இப்படம் 200 கோடி வசூல் படைக்கும் என்று தெரிகிறது. ஆனாலும் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.