உலகில் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் அப்படியே நடந்து வருவதாக நம்பப்படுகிறது. இதேபோன்று புதிய நாஸ்ட்ரடாமஸ் என்று இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடரான குஷால் குமார் அழைக்கப்படும் நிலையில் இவருடைய கணிப்புகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குஷால் குமார் தற்போது விரைவில் மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த 18ஆம் தேதி மூன்றாம் உலகப்போரை தூண்டுவதற்கான கிரகநிலைகள் இருந்தது. இந்திய எல்லையில் 9 யாத்திரீகர்கள் கொல்லப்பட்டது, தென்கொரியா நாட்டிற்குள் வட கொரியா வீரர்கள் அத்துமீறி நுழைவது, தைவான், சீனா, இஸ்ரேல், லெபனான் இடையே பதட்டம் நிலவுவது போன்றவைகள் உலகப்போருக்கான சாத்திய கூறுகள் என்று கூறியுள்ளார். இவர் ஜூன் 10ஆம் தேதி உலகப் போர் தொடங்கும் என்று கூறிய நிலையில் அது நிறைவேறவில்லை. ஆனால் மீண்டும் அழிவுக்கான சாத்திய கூறு வருகின்ற 29ஆம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.