தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதன்படி இன்று புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே போன்று  நாளை ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது