தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9-ம் தேதி முதல் 21ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்த பிறகு டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை 9 நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை. அதன் பிறகு மழை பாதிப்பின் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 2 முதல் 10-க்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரையாண்டு தேர்வை முன்னிட்டு தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி 3 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு திட்டமிட்டபடி தேர்வு நடைபெறுவதால் அனைத்து பள்ளிகளும் பாடங்களை உரிய நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் பள்ளிகள் திறந்த பிறகு அதாவது முறையாக மழை நீர் வடிந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும் போது செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.