கேரளாவில் வருகின்ற செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.இது மட்டும் அல்லாமல் கனராக வாகன ஓட்டுனர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என அமைச்சர் அந்தோணி ராஜ் அறிவித்துள்ளார். தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு வருபவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் இந்த விதியை மீறி செயல்படுபவர்கள் மீது 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.