அதிகமான ஓய்வூதியம் பெற விருப்பப்பட்டால் மத்திய அரசு மூலம் உங்களுக்கு சிறப்பு வசதியானது அளிக்கப்படுகிறது. இதையடுத்து நீங்கள் மாதந்தோறும் பெறும் பணம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உயர் ஓய்வூதிய திட்டத்தில் பயன் பெறுவோர் வருகிற ஜூன் 26ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் இருக்கிறது. அதன்படி, உங்களது கணக்கில் அதிக பணம் வேண்டுமானால், இன்னும் சில தினங்களே இருக்கிறது.

இதில் இதுவரையிலும் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து உள்ளனர். EPFO தன் ஊழியர்கள் எவ்விதமான பிரச்சனையையும் சந்திக்கக்கூடாது என கூறியுள்ளது. இதனால் உயர் ஓய்வூதிய திட்டத்தினை துவங்க முடிவுசெய்யப்பட்டு இருக்கிறது. நீங்கள் அதிக ஓய்வூதிய விருப்பத்தை தேர்ந்தெடுத்தால் ஓய்வுக்குப் பின் பெறப்பட்ட பணத்தின் அளவு குறையலாம். எனினும் உங்களது மாதாந்திர ஓய்வூதியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.