கேரளா மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை சென்று தரிசிப்பார்கள். இந்த நிலையில் சேலம் வழியை கேரளா நோக்கி ரயில் சென்றது. அந்த ரயில் முன்பதிவு பட்டியில் ஆபத்தை விளைவிக்கும் பொருட்டு ஆந்திரா ஐயப்ப பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டுள்ளனர். ரயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதி உள்ளது.

ஆனால் அதனை பொருட்படுத்தாமல் பக்தர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர். இது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. அதனை பார்த்த ரயில்வே போலீசார் ஐயப்ப பக்தர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.