வேலை, கல்வி மற்றும் வணிகம் ஆகிய காரணங்களுக்காக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களின் நலனை காக்குவதற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளது. அதன்படி வெளிமாநில மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் அயலக தமிழர்களின் குடும்பத்தில் உள்ள மகன் மற்றும் மகளுக்கு கல்வி உதவித்தொகை 10 முதல் 12 ஆம் வகுப்புக்கு 3000 ரூபாய், தொழிற் பயிற்சி கல்விக்கு 4000 ரூபாய், பொறியியல் உள்ளிட்ட பட்டய படிப்புக்கு 5000 ரூபாய், திருமண உதவித்தொகை 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.