
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ரமோன் ஸ்டீன்ஹீஸ். இவரை கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பிரேமலதா என்ற பெண் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது இரு வீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்துள்ளார். அதாவது பிரேமலதா நெதர்லாந்தில் வேலை பார்த்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது பெற்றோர் சம்பந்தத்துடன் இரு வீட்டார் முன்னிலையில் கோவையில் இந்து முறைப்படி கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். அதன்படி அக்னி சாட்சியாக அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் நடந்தது. மேலும் இந்த ஜோடிகளுக்கு தற்போது பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.