தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் ஒரு சிறுமி தன் அப்பாவை குறை கூறுகிறார், காரணம் அவரின் ஐஸ்கிரீமை அப்பா சாப்பிட்டுவிட்டார் என்கிற குற்றச்சாட்டு. கண்ணீர் மல்க தனது தாயிடம் அந்த சிறுமி குறை கூறும் வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தாயார், “உனக்கு ஏற்கனவே இரண்டு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தேன்” என கேட்க, சிறுமி 2 என பதில் அளிக்கிறாள்.
ஆனால், தாயார் சிரித்துக்கொண்டு “இது உன் அப்பாவின் ஐஸ்கிரீம்; உன் கையில் சாக்கலேட் ஐஸ்கிரீம் இருக்கு, உன்னுடையது வெண்ணிலா ஐஸ்கிரீம் தானே” என சொன்ன போதும் சிறுமி அதை ஏற்றுக்கொள்ளாமல், அடம்பிடிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டதில் இருந்தே ஆயிரக்கணக்கான மக்கள் அதனை பாராட்டியுள்ளனர். சிறுமியின் குறும்பான புகார் அனைவர் முகத்திலும் சிரிப்பையும், ரசிப்பையும் உருவாக்கியுள்ளது.
View this post on Instagram