
இமாச்சல பிரதேசத்தில் ஹமிர்பூர் மாவட்டத்தில் ஜிதேஷ் சர்மா என்ற வாலிபர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. பால்தேவ் சர்மா என்ற தரகர் மூலம் பபிதா என்ற பெண்ணை ஜிதேஷ் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்காக பால் தேவ் 1.50 லட்சம் கமிஷன் வாங்கியுள்ளார். பிறப்பு சான்றிதழ் இல்லாததால் கோவிலில் வைத்து பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். தனது மனைவியுடன் ஜிதேஷ் சர்மா சந்தோஷமாக வாழ்க்கையை தொடங்கினார்.
இந்த நிலையில் தனது தாய்க்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறி பபிதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து சென்றார். இரண்டு நாட்கள் ஆகியும் பபிதா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போதும் அழைப்புகளை ஏற்கவில்லை. அதன் பிறகு தான் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு பபிதா சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜிதேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.