பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவில் 9 படுக்கையறைகள், உடற்பயிற்சி கூடம், ஸ்பா செண்டர், நீச்சல் குளம், தியேட்டர், விளையாட்டுக்கூடம் கொண்ட பிரம்மாண்ட வீட்டை ரூ.160 கோடிக்கு வாங்கினார். அந்த வீட்டில் கட்டுமான பணிகள் முறையாக செய்யப்படாததால் ஆங்காங்கே நீர்கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் வீட்டின் பெரும்பாலான பகுதிகளில் பூஞ்சைகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று ஏற்பட்டு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வீட்டை விற்ற கட்டுமான நிறுவனம் மீது பிரியங்கா வழக்கு தொடர்ந்துள்ளார்.