கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு மன்சூர் அலிகான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று கட்சியின் பெயரை இன்று அறிவித்துள்ளார்.. நடிகர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை மூலம் அறிவித்துள்ளார். அதோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை எனவும் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்தவுடன் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து  அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி வருகின்றனர். இதையடுத்து நடிகர் விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள்   ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  கட்சி ஆரம்பித்துள்ள விஜய்க்கு மன்சூர் அலிகான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் : நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ளார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. எண்ணித் துணிக கருமம் என பல்வேறு விஷயங்களை பட்டியலிட்டு அரசியல் பிரவேசத்திற்கு ஆயத்தமாயிட்டார். இதை எப்படி பார்க்குறீங்க?

மன்சூர் அலிகான் : வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் (3முறை) என்றார்.

செய்தியாளர் : வாழ்த்து மட்டும் போதுமா.. வேறு ஏதும் சொல்ல நினைக்கிறீர்களா?

மன்சூர் அலிகான் : வேறு என்ன வேண்டும் தாங்களுக்கு.

செய்தியாளர் : அவர் எந்த பாதையில் பயணிப்பார்.. ஏற்கனவே திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களின் வெற்றி தோல்வி எல்லாம் குறிப்பிட்டு கருத்துக்கள் சொல்றாங்க. நீங்க எந்த கருத்தில் இருக்கிறீங்க?

மன்சூர் அலிகான் : பல்வேறு கருத்துகளில் யார் என்ன சொல்றாங்க.

செய்தியாளர் : நீங்களே ஒரு அரசியல் கட்சி ஆரம்பிச்சவர் தான்.. கட்சி ஆரம்பிச்சவர் தான். வேட்பாளரா நின்னவங்க தான். தமிழ்நாடு உரிமை எல்லாம் பேசுறீங்க.. நீங்க உங்கள தான் சொல்றேன். விஜய்னுடைய கட்சி, இந்த பெயர் சொல்லக்கூடிய கருத்துக்கள், நடவடிக்கைகள் எல்லாம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீங்க?

மன்சூர் அலிகான் : அது யாருக்கு தெரியும். உங்களுக்கு தான் தெரியும். இல்லையா.. நீங்க போன் போட்டு கேக்குறீங்க.. நான் என்ன சொல்றது.. ஒண்ணுமே புரியல.. என்னமோ பொதுக்குழுவுல, செயற்குழுவுல எல்லாம் முடிவெடுத்து இருக்கிறதா சொன்னாங்களே.. அப்படியா..

செய்தியாளர்  : ஆமா முடிவு எடுக்கப் போறாங்க. டெல்லியில் போய் பதிவு செய்ய போறாங்க. 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போறாங்க..

மன்சூர் அலிகான் : வணக்கம், சரி வாழ்த்துக்கள்.. ஓட்டு போடுங்க. நம்மளும் போட்ரலாம்..

செய்தியாளர்  : சரி மகிழ்ச்சி

மன்சூர் அலிகான் : நன்றி வணக்கம் என தெரிவித்தார்..