சமூக வர்த்தக தளமான ஸ்டாக்ரோ இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1,050 கோடி என தெரிவித்துள்ளது. பிசிசிஐ ஏ பிளஸ் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, விராட் கோலி ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பாதிக்கிறார். டெஸ்ட் போட்டியில் ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டியில் ரூ.6 லட்சமும், டி20யில் ரூ.3 லட்சமும் வாங்குகிறாராம்.

அதேபோல் ஐபிஎல்லில் ரூ.15 கோடி கோலியின் சம்பளம். மேலும் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.8.9 கோடியும், ஒரு ட்விட்டர் பதிவுக்கு ரூ.2.5 கோடியும் சம்பாதிக்கிறார். மும்பையில் ரூ.34 கோடி மதிப்பில் ஒரு வீடும், குருகிராமில் ரூ.80 கோடி மதிப்பில் மற்றொரு வீடு உள்ளது.