தமிழகத்தில் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதனை தொடர்ந்து நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் அவரிடம் எட்டு நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் 8 நாள் போலீஸ்காவில் எடுத்ததற்காக நீதிமன்ற ஊழியர்கள் அவரிடம் கையெழுத்து வாங்கினார். செந்தில் பாலாஜி நேற்று சுயநினைவில் இல்லாததால் அவரிடம் கையெழுத்து வாங்க முடியாமல் போன நிலையில் இன்று கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது.