பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததில் 3 உயிரிழந்த நிலையில் 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வந்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மீண்டும் வர வேண்டும். இந்நிலையில் அந்த பகுதி மக்கள் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக குற்றம் சாட்டியுள்ள  நிலையில் இது பற்றி அமைச்சர் அன்பரசன் கூறும் போது, குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை. அப்படி கலந்திருந்தால் 300 பேர் வரை பாதிக்கப்பட்டு இருப்பார்கள் எனவும் 20 பேர் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் மக்கள் மீதுதான் தவறு உள்ளது என்றும் திமிராகக் கூறியுள்ளார்.

இப்படி திமிராக பேசும் அமைச்சரும் திமுகவினரும் அந்த பகுதியில் உள்ள குடிநீரை குடிக்க முன் வருவார்களா.? அதன்பிறகு தெருக்களில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவு தெளிக்கப்படுகிறதா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரிடம் பிளீச்சிங் பவுடர் விலை 10-13 தான் என்கிறார் அமைச்சர் அன்பரசன். அப்படி இருக்கும்போது ரூபாய் 55-க்கு ப்ளீச்சிங் பவுடரை மாநகராட்சி ஏன் கொள்முதல் செய்தது என்ற கேள்விக்கு அமைச்சரிடம் பதில் இல்லை. எங்கும் ஊழம் எதிலும் ஊழல் என்ற இந்த மக்கள் விரோத ஆட்சியால் தினம் தினம் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதும் உயிரிழப்புகளும் தொடர்கிறது. மேலும் திராவிட மாடல் அரசு என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கும் உண்மையாகவே கள நிலவரங்கள் தெரிவிக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.