அமேதி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் இழந்த செல்வாக்கை மீட்டுள்ளது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தோல்வியை சந்தித்துள்ளார். அதன்படி அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கிஷோரி லால் ஷர்மா 50,758 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை வீழ்த்தி ஸ்மிருதி இராணி வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் தேர்தல் சமயத்தில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டால் அவர் நிச்சயம் தோல்வியடைவார் என பாஜக பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.