அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று ரிசல்ட் வெளியானது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி வாகை சூடியுள்ளார். அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் இருக்கும் நிலையில் 538 எலக்ட்ரால் வாக்குகள் இருக்கிறது.
இதில் 270 வாக்குகளை பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் அந்த வாக்குகளை பெற்று ட்ரம்ப் வெற்றி வாகை சூடியுள்ளார். கமலா ஹாரிஸ் 214 எலக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் மொத்தமுள்ள 12 எலக்ட்ரோல் வாக்குகளையும் பெற்று கமலா ஹாரிஸ் வெற்றி வெற்றி வாகை சூடியுள்ளார். மேலும் இதேபோன்று முக்கிய மாகாணமான கலிபோர்னியாவையும் கமலா ஹாரிஸ் வென்றுள்ளார்.