அமெரிக்காவின் கலிபோர்னியாவின் புறப்பகுதி கேமரான் ஏர் பார்க் எஸ்டேட் எனப்படும் பகுதியை விமான பார்க் நகரம் என்று அழைக்கப்படுகின்றது.இந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் கார் வைத்திருப்பது போல ஒரு விமானத்தை வைத்துள்ளனர். இதனால் அந்த நகரத்தில் உள்ள அனைத்து வீட்டின் வாசல் மற்றும் சாலைகளின் இரண்டு புறமும் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் அனைவரும் பெரும்பாலும் இந்த சிறிய ராசா விமானத்தில் பயணிக்கின்றனர்.
இந்த தெருக்களில் உள்ள சாலைகள் விமானிகள் விமான நிலையத்திற்கு விமானத்தில் செல்ல உதவும் விதமாக மிகவும் பரவலாக உருவாக்கப்பட்டுள்ளன.அந்தப் பகுதியில் வெளியாட்கள் அனுமதி இல்லாமல் சொத்தை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் உரிமையாளர்கள் அவர்களை அழைத்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதனால் அந்த நகரம் கூடுதல் பாதுகாப்பு நகரமாக இருக்கின்றது.