தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் மின் கணக்கீடு மாதம் ஒருமுறை எடுக்கப்படும் என்று சொன்ன நிலையில் இதுவரை அந்த தீர்மானத்தை நிறைவேற்றவில்லை என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். அதன் பிறகு மின்கட்டண உயர்வு பால் விலை உயர்வு போன்றவற்றிற்கும் கண்டனம் தெரிவித்த அவர் ஜாதிவாரி கணக்கெடுப்பை அனைத்து மாநிலங்களும் நடத்திவரும் நிலையில் மத்திய அரசை காரணம் காட்டி திமுக அரசு அதனை நடத்தாமல் இருப்பது தவறு என்று கூறி அதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதாவது இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் மத்திய மற்றும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்றவற்றிற்கும் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவதாகவும் ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்காக பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளதாகவும் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.