செங்கல்பட்டு மேட்டு தெருவில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன்(34) என்ற மகன் உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கார்த்திகேயன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 1/2 வயதுடைய ஜஸ்வதி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். குழந்தை அந்த பெண்ணுடன் இருந்தது. இந்த நிலையில் குழந்தையை தனது மாமியார் வீட்டில் விட்டுவிட்டு கார்த்திக்கின் மனைவி வந்தவாசி சென்று விட்டதாக தெரிகிறது.
கார்த்திக் தனது 2 1/2 வயது மகளை அடிப்பது, தலையில் தட்டுவது, அரைவது கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சிப்பது உள்ளிட்ட கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலானது. இதுகுறித்து குழந்தைகள் நல குழுமத்திற்கு தகவல் கிடைத்தது. அவர்கள் போலீசார் உதவியுடன் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று பெண் குழந்தையை மீட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் கார்த்திகேயனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.