தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் பாலமுருகன் என்னும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், நடிகர்கள் சமுத்திரக்கனி, சாய்குமார், ஆடுகளம் நரேன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீசான நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வாத்தி திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ. 8 கோடி வசூலித்துள்ள நிலையில், கர்நாடகாவில் 1.5 கோடியும், வெளிநாட்டில் 1.5 கோடியும் வசூலித்துள்ளது. அதன்படி மொத்தமாக 14 கோடி ரூபாய் முதல் நாளில் வாத்தி படம் வசூலித்துள்ளது.

இதேபோன்று இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் நடிப்பில் பகாசூரன் என்ற திரைப்படமும் நேற்றைய ரிலீஸ் ஆனது. ஒரே நாளில் அண்ணன்-தம்பி இருவரின் திரைப்படமும் ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த படத்தை மோகன் ஜி இயக்கியிருந்த நிலையில் நட்டி நட்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி உலகம் முழுவதும் 1.5 கோடிக்கு மேல் பகாசூரன் திரைப்படம் வசூலித்துள்ளது. மேலும் இனி வருகிற நாட்களில் வாத்தி மற்றும் பகாசூரன் திரைப்படம் இன்னும் அதிக வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.