பெண்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 7000 கிடைக்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க இருக்கிறார். அதன்படி இந்த திட்டம் முதல் கட்டமாக ஹரியானாவில் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை ஹரியானா மாநிலத்தில் இன்று பிரதமர் தொடங்கி வைக்கும் நிலையில் பின்னர் பிற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது எல்ஐசி பீமா சகி என்ற திட்டத்தின் கீழ் பெண்கள் முகவர்களாக நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் முதல் ஆண்டில் 7000 ரூபாயும், இதற்கு அடுத்த ஆண்டில் 6000 ரூபாயும், அதற்க்கும் அடுத்த ஆண்டில் 5000 ரூபாயும் உதவித்தொகை என்பது வழங்கப்படும். மேலும் பெண்களுக்கு மாதந்தோறும் 7000 ரூபாய் உதவி தொகை கிடைக்கும் புதிய திட்டத்தை இன்று பிரதமர் தொடங்கி வைப்பது வரவேற்பை பெற்றுள்ளது.