2026ல் உறுதியாக பாமக ஆட்சிக்கு வரும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார். இது தொடர்பாக மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது “திமுக தொடங்கி 18 வருடங்களில் ஆட்சிக்கு வந்தது. அதிமுக தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தது.

ஆனால் 1989-ல் துவங்கப்பட்ட பாமக இன்னும் ஆட்சிக்கு வரவில்லை என்ற வருத்தம் உள்ளது. 55 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆட்சிகளில் மக்கள் சேர்ந்து விட்டார்கள். இதற்கிடையில் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்த வேண்டும். வரும் 2026ல் பாமக வியூகம் வேறுமாதிரி இருக்கும். பா.ம.க தலைமையில் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்போம்” என்று அன்புமணி ராமதாஸ் பேசினார் .