தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமான விஜய்-அஜித் ஆகிய இருவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். கடந்த 1997ம் வருடம் அஜித் நடிப்பில் வெளியாகிய உல்லாசம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருப்பார். இந்த படத்தை ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கியிருந்தார்கள். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜே.டி மற்றும் ஜெர்ரி சினிமாவில் நடைபெற்ற பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளனர்.

அதாவது, “உல்லாசம் திரைப்படத்தை டைரக்டு செய்ய தொடங்கும்போது சிலர் அஜித், விஜய் இருவரும் இப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறினார்கள். எனினும் நடிகர் விக்ரம் என் கல்லூரி நண்பர். அந்த நேரத்தில் அவர் சினிமாவில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார். இதன் காரணமாக நாங்கள் விக்ரமை நடிக்க வைத்தோம்” என கூறியுள்ளனர். அவர்கள் பேசிய அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.