மேகாலயாவில் பாதுகாப்பு படையை சேர்ந்த “லால்சி” எனும் மோப்ப நாய் 3 குட்டிகளை ஈன்றது. ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்த பாதுகப்புப் படை உத்தரவிட்டு உள்ளது. ஏனெனில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நாய்கள் கர்ப்பம் தரிக்கக்கூடாது. பாதுகாப்பு படையின் மருத்துவரின் மேற்பார்வையில் தான் இனப்பெருக்கத்தில் ஈடுபட வேண்டும் உள்ளிட்ட பல விதிகள் உள்ளன.

இதனால் லால்சி அதனை மீறியது எப்படி என்று விசாரிக்கப்பட உள்ளது. மேலும் இந்த நாயை பராமரித்து வரக்கூடிய 43வது பட்டாலியன் வீரர்களிடமும் இது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளது. கடுமையான கண்காணிப்பையும் மீறி பிஎஸ்எப் மோப்ப நாய் கர்ப்பமானது படையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.