தமிழ் சினிமாவில் 90 ஸ் காலத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் சங்கீதா. இவர் தற்போது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்தார். அந்த பெட்டியில் தான் நடித்த பிதாமகன் திரைப்படத்தின் அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். அதில் அவர் கூறியதாவது, நான் தெலுங்கு சினிமாவில் பிஸியாக இருந்தேன். அப்போது 9 படங்களை கைவசம் வைத்திருந்தேன். ஆனால் எனக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதோடு சூர்யா, விக்ரம் ஆகியோர் பெரிய நடிகர்களாக இருப்பது தெரியாமல் இருந்தது. அப்போது தான் பிதாமகன் படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள். ஆனால் தேதி இல்லாததால் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.

என் குரு வம்சி  சார் அடுத்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டார். அதற்கு நான் பல படங்களில் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது ஆனால் என்னால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்கு கோபப்பட்ட வம்சி சார், பாலா சார் படத்தில் நடிக்க வரும் வாய்ப்பை நீ தவிர்க்கக்கூடாது. உடனே அவருக்கு போன் செய்து மன்னிப்பு கேள் என்று கூறினார். உடனடியாக பாலா சாருக்கு போன் செய்து வம்சி சார் கண்டித்தது குறித்து கூறினேன். அதோடு உங்கள் படத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறினேன். அதன் பின் அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் மேக்கப் இல்லாமல் நடிக்க சொன்னத்தோடு, பழைய புடவைகளை கொடுத்து அணியுமாறு கூறினார்கள்.

நானும் மேக்கப் இல்லாமல் பழைய புடவைகளை உடுத்திக்கொண்டு பாலா சார் முன்னாள் போய் நின்றேன். ஆனால் அவர் என்ன புடவை இவ்வளவு பிரஷ்ஷாக இருக்கிறது என்று மண்ணில் போட்டு புரட்டி எடுத்த புடவையை கட்ட சொன்னார். அப்போது சூர்யா, விக்ரமை பார்க்கும்போது மிகவும் கேவலமாக இருந்தார்கள். பாலா சார் என்றால் இவ்வளவு தான் என்று நாங்கள் பழகிக் கொண்டோம். எங்களுடைய ஒரே குறிக்கோள் அவரை சந்தோஷப்படுத்துவதுதான் என்று கூறினார். ஒவ்வொரு காட்சியும் முடிந்த பின்னரும் அவர் மானிடரில் பார்த்து சூப்பர் என்று சொல்லிவிட்டால் எங்களுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்‌ என்று நடிகை சங்கீதா தெரிவித்தார்.