திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ‌ வீரக்குமார் (31). இவர் கடந்த 18-ம் தேதி கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி கோவிலுக்கு சென்றார். இவர் மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்த பிறகு கீழே நண்பர்களுடன் சேர்ந்து இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் ஏழாவது மலையில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவருடைய நண்பர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவரை மலைவாழ் மக்களுடன் சேர்ந்து வனத்துறையினர் மீட்டனர்‌. அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி வீரக்குமார் உயிரிழந்தார். மேலும் இது தொடர்பாக ஆலாந்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.