நொய்டாவில் பெண்ணின் வயிற்றில் 9 இன்ச்குழாய் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரண் நேகிக்கு நொய்டா மருத்துவமனையில் கருப்பை கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வீடு திரும்பிய பிறகு, அவளுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.இதனால் அவர்  மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அப்போது பெண்ணின் வயிற்றில் ஒரு பிளாஸ்டிக் குழாய் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை மருத்துவர்கள் அகற்றினர்.  கிரண் நேகி முதலில் ஆரம்ப அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மீது புகார் அளித்தார்.  அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.