நாடாளுமன்றத் தேர்தலில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இக்கட்சி, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அமமுக உடன் கூட்டணி அமைத்து, வாணியம்பாடி, கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டது. இந்த முறை அமமுக பாஜக உடன் கூட்டணி அமைத்ததால், அக்கட்சி அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. இஸ்லாமிய மக்கள் மத்தியில் ஓவைசி-க்கு ஓரளவுக்கு ஆதரவு இருக்கிறது