ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வேடல் பகுதியில் விவசாயியான சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவலிங்கத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் சிவலிங்கம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்