
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜன,.11) அஜித் நடித்த “துணிவு”, விஜய் நடித்த வாரிசு ஆகிய திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இதற்கென சென்ற 2 நாட்களாக தமிழகம் முழுவதும் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆன பின் 2 ரசிகர் மன்றத்தினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, அதனால் சினிமா தியேட்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படத்தின் காட்சி பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டது. எனினும் விஜய்யின் வாரிசு திரைப்படம் 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது. இதற்கிடையில் துணிவு திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வந்த ரசிகர்கள், விஜய்யின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்தது அனைவராலும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அஜித் ரசிகர்கள் எந்த பாகுபாடுமின்றி விஜய் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்தது தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
#AK Fans Celebrate #Thalapaathy Also at Kasi theatre 🥁🥳 pic.twitter.com/NLeYeXdTB4
— Ayyappan (@Ayyappan_1504) January 10, 2023