தமிழ் சினிமாவில் பிரபலமான இருக்கும் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படத்தின் முழு விமர்சனத்தை தற்போது பார்க்கலாம். அதன்படி வங்கி கொள்ளையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் உள்ள யுவர்ஸ் பேங்க் என்ற பேங்கில் 500 கோடி ரூபாயை கொள்ளையடிக்க கமிஷனர் மற்றும் சிலர் திட்டம் போடுகிறார்கள். அவர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த அதே பேங்கில் சர்வதேச கேங்ஸ்டராக மிரட்டி இருக்கும் அஜித்தும் கொள்ளையடிக்கிறார்.

அஜித்தை பிடிப்பதற்கு கமிஷனர் சமுத்திரக்கனி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவினர் அஜித்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். இந்நிலையில் பேங்கில் உண்மையாகவே யார் கொள்ளை அடிக்கிறார்கள் என்பதை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவது தான் படத்தின் மீதி கதை. அதன் பிறகு ஒரு வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறது என்பது படத்தின் மையக்கரு. ஒரு வங்கி மியூச்சுவல் ஃபண்ட், மினிமம் பேலன்ஸ் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற பல்வேறு விஷயங்களில் வாடிக்கையாளர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறது என்ற விஷயத்தையும் அழகாக படத்தில் காண்பித்து இருக்கிறார்கள்.

நடிகர் அஜித் மங்காத்தா படத்திற்கு பிறகு மீண்டும் நெகட்டிவ் ரோலில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். நடிகர் அஜித்தின் என்ட்ரி முதல் படம் முழுவதும் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றிருப்பது மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். நடிகர் அஜித்திடம் இப்படி ஒரு ஸ்டைலிஷ் இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று கூறலாம். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களில் வந்த நெகட்டிவ் விமர்சனங்களை எல்லாம் துணிவு படத்தின் மூலம் துவம்சம் செய்து இருக்கிறார் தல அஜித். தமிழ் சினிமாவில் கதாநாயகி இவ்வளவு முக்கியத்துவம் உண்டா என்று அளவுக்கு மஞ்சு வாரியர் கதாபாத்திரத்திற்கு படத்தில் பெரிய அளவில் முக்கியத்துவம் இருக்கிறது.

மிரட்டலான வில்லனில் பேங்கின் மேனேஜராக ஜான் கொக்கன் நடித்துள்ளார். ஜான் கொக்கன் தான் படத்தின் மெயின் வில்லன். சமுத்திரகனி ஒரு நேர்மையான போலீஸ் ஆபீசராக நடித்துள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகள், பாடல்கள், ஒளிப்பதிவு என அனைத்துமே படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம். படத்திற்கு இசை இன்னும் பரபரப்பை தூண்டுகிறது. படத்தில் எத்தனை துப்பாக்கியால் சுடுகின்றனர் எத்தனை முறை குண்டு வெடிக்கிறது என்பதை எண்ணி கூட பார்க்க முடியாது. படத்தில் தேவையற்ற காட்சிகள் என்று எதுவுமே கிடையாது.

பிளாஷ்பேக் காட்சியை கூட மிகவும் சுருக்கமான முறையில் எளிமையாக சொல்லி இருக்கிறார்கள். வங்கிகளில் தரும் எந்த ஒரு படித்துப் பார்க்காமல் கையெழுத்து போட வேண்டாம் மற்றும் பணத்திற்கு பேராசைப்பட வேண்டாம் என்ற செய்தியை தான் துணிவு படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார்கள். மேலும் படம் முழுக்க முழுக்க அஜித்தின் நடிப்பு மிகப்பெரிய பக்கபலம். மொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கு துணிவு திரைப்படம் மிகப்பெரிய விருந்து என்று சொல்லலாம்.