ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்த வீரர்கள் பட்டியலை நேற்று வெளியிட்ட நிலையில் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் அணியில் இருந்து விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஒரு பயங்கர விபத்தில் ரிஷப் பண்ட் காயம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த நிலையில் அதன் பின் காயம் குணமாகி தற்போது இந்திய அணியில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். இருப்பினும் அவரை டெல்லி அணி விடுவித்தது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருப்பினும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஒருபுற மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறியதாவது, நான் டெல்லியில் நான் தோனியை சந்தித்தேன். அப்போது அங்கு ரிஷப் பண்ட் இருந்தார். ஒருவர் விரைவில் மஞ்சள் ஜெர்சியை அணைந்து விளையாட போகிறார் என்று கூறினார். மேலும் இதன் மூலம் ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட சென்னை அணையில் விளையாடுவது உறுதியாகிவிட்டது.