ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் திருப்பதி கோவிலில் நேற்று முன்தினம் வசூலான காணிக்கை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில்‌ ரூ.3 கோடியே 28 லட்சம் காணிக்கையாக வசூல் ஆகியுள்ளது. அதன் பிறகு 50,599 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மேலும் நேற்று முன்தினம் 90,721 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.