தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க, அர்ஜுன், சஞ்சய்தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க 7 ஸ்கிரின்‌ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என பட குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் லியோ படத்தின் டைட்டில் ப்ரோமோ தொடர்ந்து யூடியூபில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது 35 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூடியூபில் சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இது விஜய் ரசிகர்கள் மத்தியில் தற்போது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.