தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதேபோன்று தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீசானது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷாம், சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் துணிவு படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் மட்டும் துணிவு திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வாரிசு திரைப்படம் தமிழகத்தில் 100 கோடி வசூலித்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது துணிவு திரைப்படமும் 100 கோடி வசூலித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.