தென்னிந்திய சினிமாவின் பெருமைமிகு இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் கே. விஸ்வநாத் (92). இவர் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து பல விருது பெற்ற படங்களை இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களை இயக்கியுள்ள கே. விஸ்வநாத் கடந்த 2-ம் தேதி உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் கே. விஸ்வநாத் உயிரிழந்து 1 மாதம் கூட ஆகாத நிலையில் அவருடைய மனைவி ஜெயலட்சுமியும் (82) உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். மேலும் இவருடைய மரணம் குடும்பத்தினர் மத்தியிலும் திரையுலகினர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.