கடின உழைப்பின் வாயிலாக நாஸ் ஜோஷி என்பவர் கடந்த 2021-22ம் வருடம் சர்வதேச திருநங்கை அழகி பட்டத்தை வென்றார். இவர் திருநங்கை என்பதனை அறிந்த குடும்பத்தினர் நாஸை அவரது தாய் மாமாவிடம் ஒப்படைத்தனர். 10 வயதில் நாஸின் தாய்மாமாவும் அவரது நண்பர்கள் சில பேரும் சேர்ந்து அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். நாஸ் பாலியல் வன் கொடுமையால் பாதிக்கபட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின் நாஸ் பார்கள் மற்றும் மசாஜ் பார்லர்கள் உள்பட பல்வேறு இடங்களில் பணியாற்றினார். மேலும் தெருக்களில் பிச்சையெடுத்தார். எனினும் அத்தனை கஷ்டங்களையும் மீறி தன் படிப்பை தொடர்ந்தார். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியில் பட்டம் பெற்ற பின், நாஸ் ஜோஷி 2013ல் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அதன்பின் அவர் தன் மாடலிங் வாழ்க்கையை துவங்கினார். நாஸ் டெல்லி தெருக்களில் பெண்களை போன்று உடையணிந்து தைரியமாக போட்டோஷூட் செய்தார். அத்துடன் நாஸ் தொடர்ந்து 3 முறை உலக அழகி பட்டத்தை வென்றார். அதுமட்டுமல்லாமல் 8 அழகிப்போட்டிகளில் கிரீடத்தையும் நாஸ் வென்று உள்ளார். நாஸ் ஜோஷி நம் நாட்டின் முதல் திருநங்கை சர்வதேச அழகுராணி என்பது குறிப்பிடத்தக்கது..