தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர் முத்து குமரன் மீது 43 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளின் புகாரின் பேரில் சைல்ட் ஹெல்ப் லைன் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் குறித்து, பள்ளியில் படிக்கும் 43 மாணவிகள் ஆசிரியர் முத்து குமரன் மீது பாலியல் தொல்லை குறித்த புகாரை சைல்ட் ஹெல்ப் லைன் அதிகாரிகளிடம் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஆசிரியர் மீது குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
முதன்மை கல்வி அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கணித ஆசிரியர் முத்து குமரனை சஸ்பெண்ட் செய்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினரும் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் ஆசிரியரை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் தற்போது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.