மயிலாடுதுறையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை சக மாணவனும் மற்றொரு இளைஞரும் சரமாரியாக தாக்கியதுடன் வீடியோ காலில் நண்பனிடம் மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் சீருடை அணிந்த மாணவனும் மேலும் சில இளைஞர்களும் சேர்ந்து மாணவனை சரமாரியாக அடித்து துன்புறுத்துவது போன்று வீடியோவில் இருந்துள்ளது.

இதைத்தொடர்ந்து வீடியோ காலில் பேசும் நண்பரிடம் அடிச்சது போதுமா? இல்ல இன்னும் அடிக்கவா? எனக் கேள்வி கேட்டு தாக்கி உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வரும் நிலையில் மாவட்ட காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இதுகுறித்து காவல்துறையினர் மாணவர்களிடம் விசாரணை நடத்தியத்தில் இளஞ்சேலியன் என்ற மாணவனுக்கும் தினேஷ் என்ற மாணவனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் தினேஷின் கூட்டாளிகளான 5 மாணவர்கள் இளஞ்சேலியனை சரமாரியாக அடித்துள்ளதாகவும் அதனை வீடியோ கால் மூலம் அவரிடம் காண்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த 5 மாணவர்கள் 18 வயது நிரம்பாதவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அந்த 5 மாணவர்களை கைது செய்ததுடன் தற்போது தினேஷை தேடி வருகின்றனர்.