செங்கல்பட்டு வரை சென்னையை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அமைந்தால் கோயம்பேடு போல இது பரபரப்பான பகுதியாக மாறிவிடும். இதனால் மக்கள் தானாகவே இங்கு குடிபெயர தொடங்கி விடுவார்கள். இதனால் செங்கல்பட்டு பிசியான ஒரு இடமாக மாறி விடும். எனவே செங்கல்பட்டு மையமாக வைத்து பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. எனவே அடுத்த சிட்டியாக மாறப்போகும் செங்கல்பட்டில் இனி எந்த காலத்திலும் குடிநீர் பஞ்சம் வந்து விடவே கூடாது என்ற நோக்கத்தில் தற்போது தமிழக அரசு சூப்பரான திட்டம் ஒன்று செயல்படுத்த உள்ளது.

அதாவது செங்கல்பட்டை சுற்றிலும் ஏராளமான கல்குவாரிக் குட்டைகள் இருக்கிறது. இங்கு தேங்கியுள்ள நல்ல தண்ணீரை சுத்திகரித்து குடிநீராக மாற்ற அரசு முடிவு செய்தது. இதன் ஒரு பகுதியாக அந்த கல்குவாரி குட்டைகளில் உள்ள நீரை குடிநீராக பயன்படுத்தலாமா என்று ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் செங்கல்பட்டை அடுத்த புளிப்பாக்கம் ஊராட்சியில் 250 ஏக்கர் பரப்பளவு 300 அடிக்கு மேல் ஆழமாக கொண்ட பிரம்மாண்டமான கல்குவாரி நீரை குடிநீராக பயன்படுத்த முடியும் என்று உறுதி செய்யப்பட்டது.

எனவே இந்த கல்குவாரி நீரை சுத்திகரித்து மறைமலை நகராட்சி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் இனி தண்ணீர் பஞ்சமே இல்லாத சூழல் ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.