கன்னட சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும் நடிகராகவும் இருப்பவர் ரிஷப் செட்டி. இவர் இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்தப் படம் பழங்குடியின மக்களின் சமய வழிபாடு மற்றும் பழங்குடியினர்களிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் நபர்களிடமிருந்து எப்படி நிலம் மீட்கப்படுகிறது போன்றவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.
இந்த படத்திற்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் சிறந்த நம்பிக்கை குறிய நடிகர் என்ற பிரிவில் ரிஷப் செட்டிக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் ரிஷப் செட்டி தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.