தமிழ், ஹிந்தி உட்பட பல மொழிகளில் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் ஜொனிட்டா‌ காந்தி. இவர் தமிழில் அரபிக்குத்து போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடகர் டிவைனுடன் இணைந்து தனி பாடல் வீடியோ ஒன்றில் நடித்துள்ளார். இந்த தனிப்பாடலில் நடிகர் விராட் கோலியும் ஜொனிட்டா மற்றும் டிவைனுடன் சேர்ந்து நடித்துள்ளனர். இந்த பாடல் நயா ஷெர் என்கிற ராப் பாடல் வகையில் அமைந்துள்ளது.

இந்த தனிப்பாடலில் நடித்தது குறித்து விராட் கோலி கூறியதாவது, நான் வெளியுலக வாழ்க்கையிலும் ஆடுகளத்திலும் எப்போதும் துணிச்சலான முடிவை எடுப்பேன். அப்படி துணிச்சலான முடிவை எடுத்ததால்தான் மேற்கு டெல்லியை சேர்ந்த ஒரு சிறுவனால் இந்த அளவுக்கு உயர முடிந்தது. இந்த பாடலின் படப்பிடிப்பில் கலந்து கொண்டது நல்ல அனுபவம். அந்தப் பாடலை படமாக்கும் போது நான் நானாக இருந்தேன். இது புது கலைஞர்களுக்காக. மேலும் இது உங்களுக்கான வாய்ப்பு என்று கூறினார்.