கடந்த 2002 ஆம் ஆண்டு பிரநயமணிதுவல் எனும் மலையாள படத்தில் நடிகை கோபிகாவிற்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் வெற்றி அடைந்ததை  தொடர்ந்து அடுத்து பல படங்கள் நடிக்க வாய்ப்பு வந்தது. சினிமா மீது ஆர்வமுள்ள கோபிகா மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். அதில் தமிழில் ஆட்டோகிராப், தொட்டி ஜெயா, எம்டன் மகன், வீராப்பு, கனா கண்டேன் போன்ற ஹிட் படங்களில் நடித்தார்.

அதில் ஆட்டோகிராப் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்றே கூறலாம். கடந்த 2008 ஆம் ஆண்டு அகிலேஷ் சக்கோ என்பவரை திருமணம் செய்து ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகியுள்ளார். தற்போது நடிகை கோபிகாவிற்கு ஒரு பெண் மற்றும் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டு குழந்தைகளையும் கவனித்துகொண்டு  குடும்பத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது இவரது குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதில் நடிகை  கோபிகா முற்றிலும் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போய் உள்ளார்.