விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காக்காபாளையம் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வரும் நிலையில் வீட்டில் மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாடுகளை மேய்ச்சலுக்காக வழக்கம்போல் அவிழ்த்து விட்டு சென்றுள்ளார்.‌ இதில் ஒரு மாடு மட்டும் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் சுதாகர் மாட்டை தேடி சென்றார்.

அப்போது குடல் சரிந்த நிலையில் மாடு கீழே கிடந்தது. அதாவது மர்ம நபர் யாரோ கத்தியால் மாட்டை குத்தியுள்ளார். உடனடியாக சுதாகர் மாட்டை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாடு பரிதாபமாக இறந்தது. இது தொடர்பாக மரக்காணம் காவல் நிலையத்தில் சுதாகர் புகார் கொடுத்துள்ளார். அதோடு விழுப்புரம் விலங்கு நல வாரியத்திலும் அவர் புகார் கொடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.