பிரபல நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பார்க்க வந்த அஜித்தின் தீவிர ரசிகரான பரத் (19) என்ற வாலிபர் டேங்கர் லாரியின் மீது ஏறி ஆட்டம் போட்ட போது திடீரென தவறி விழுந்து முதுகு தண்டுவடம் உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இந்த சம்பவம் குறித்து பேசி உள்ளார்.
அவர் கூறியதாவது, சினிமா படங்கள் வெளியாகும் போது பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக் கூடாது. கொண்டாட்டத்தின் போது ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம். மேலும் இதுபோன்ற சம்பவங்களால் குடும்பத்தினர் தான் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர் என்று கூறியுள்ளார்.