ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. முன்னாள் கேப்டன் தோனி கடைசி ஓவரில் மூன்று இமாலய சிக்ஸர்களை பரப்பி விட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இருபதாவது ஓவரில் அதிக சிக்ஸர்களை (64) விலாசிய வீரர்களின் பட்டியலில் தொடர்ந்து பெரும் வித்தியாசத்தில் தோனி முன்னிலை வகிக்கின்றார்.